الأربعاء، 2 يونيو 2010

enrum anbudan

هناك تعليقان (2):

  1. அத்தனையும் உணர்கிறேனடி



    மோக வெப்பத்தில் களைத்து
    காதல் நிழலில் மடி சாய
    பொட்டென விழும் தேன் துளியாய்
    உதட்டில் படியும் உன் உதட்டுச் சுவை..


    உயிரின் அறைகளை உயிர்ப்பித்து
    உறங்கும் சோம்பலைச் சுழற்றி வீச
    உதடு நீவும் உன் விரல்களில் உதிரும்
    தொட்டெடுத்து தொடுத்த மல்லிகை வாசம்...


    பட்டென விரியும் பச்சை மார்பில்
    நுனி நாவால் கவிதை எழுதி
    எழுத்துப்பிழைதனை எச்சில் கொண்டு
    சரிசெய்யும் இலக்கியச் சுவை...


    கலந்து களைத்து நிதானித்து நிறைந்து
    வியர்வைத் துளி பூத்து நிற்கும்
    காது மடலோரம் ஒட்டாத எழுத்துகளில்
    ஒளிந்து கிடக்கும் உன்மத்த வார்த்தை...




    வேடத்தையும் வெட்கத்தையும் களைந்து
    மௌனம் தொலைத்து திமிறும் அன்பில்,
    தினவெடுத்த காதலில் அகலவிரித்த கைகளால்
    அள்ளி அணைக்க அத்தனையும் உணர்கிறேனடி

    ردحذف
  2. உன் நண்பனை அளவோடு நேசி!

    ஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்!

    உன் எதிரியை நேசிக்கக் கற்றுக்கொள்!

    ஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்!

    ردحذف